முந்திரி சிக்கன்

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)

தேவையானப் பொருட்கள்:

கோழிக்கறி – அரைக் கிலோ
சிக்கன் ஸ்டாக் – 3 கப்
முந்திரிப்பருப்பு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
குடை மிளகாய் – ஒன்று
பூண்டு – 10 பல்
கார்ன்ஸ்டார்ச் – 3 மேசைக்கரண்டி
கேரட் – ஒன்று
வெள்ளை மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி
அஜினோமோட்டோ – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 எலும்பில்லாத கோழி மார்புத் துண்டங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அவற்றை கழுவி சுத்தம் செய்து ஒரு அங்குல சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தின் மேல்தோலுரித்து நான்காக நறுக்கி இதழ்களைத் தனித்தனியே பிரித்துக் கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குல மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் கார்ன் ஸ்டார்ச்சினை கலக்கவும். காரட்டை கழுவி எடுத்து மேல் தோலினை சீவிவிட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு அதில் முந்திரியைப் போட்டு அதிகம் சிவக்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியின் எண்ணெய் முழுதையும் வடித்து விடவும். பிறகு அதே வாணலியில் நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும். அத்துடன் கோழித்துண்டங்களையும் சேர்க்கவும். வெங்காயம், காரட் ஆகியவற்றையும் சேர்த்து 4 நிமிடங்களுக்கு வேகவிடவும். வெள்ளை மிளகுத்தூள், உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை சிக்கன் ஸ்டாக்குடன் சேர்த்து வாணலியில் ஊற்றிக் கலக்கி, தீயை அதிகப்படுத்து 3 நிமிடங்களுக்கு வேகவிடவும். பிறகு கார்ன்ஸ்டார்ச், நறுக்கின குடை மிளகாய்த் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும். கோழித் துண்டங்கள் நன்கு வெந்து, குழம்பு கறியில் நன்கு படிந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கலக்கி சூடாகப் பரிமாறவும்.

VN:F [1.9.18_1163]
Rating: 0.0/5 (0 votes cast)
VN:F [1.9.18_1163]
Rating: 0 (from 0 votes)
No votes yet.
Please wait...
0.00 avg. rating (0% score) - 0 votes

Most Popular Recipes

Chicken Recipe Booklet 2022
Vencobb Fresh Chicken

“It is my dream to see Indiavas the number one position on the Poultry map of the world.

+more
Reshmi Kabab
Chicken Recipe Booklet 2021
Chicken Recipe Booklet 2020